அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2023
தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
மார்ச்
/ ஏப்ரல் 2023-ல் நடைபெறவுள்ள மேல்நிலை
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள
சேவை மையங்களுக்கு (Govt. Examination
service centre) உரிய நாட்களில் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்கள்
ஆன்-லைனில் பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
• ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாம் ஆண்டு (1) தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத / தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
•
கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி தனித்தேர்வராக மேல்நிலை
முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது மேல்நிலை முதலாமாண்டு
தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத
விண்ணப்பிக்கும்பொழுது, அத்துடன் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு:-
அரசாணை
(டி) எண்.573, பள்ளிக்கல்வி (ஜிஇ1) துறை, நாள்.03102017-ன்படி, நேரடித் தனித்தேர்வர்களாக
முதன் முறையாக மேல்நிலை பொதுத்
தேர்வெழுத விரும்புவோர், மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்
தேர்வெழுதிய பின்னரே மேல்நிலை இரண்டாம்
ஆண்டு (2) பொதுத் தேர்வு எழுத
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
கல்வி
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்
தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service
Centre) நேரில்
சென்று
தனித்
தேர்வர்கள்,
26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.012023 (செவ்வாய் கிழமை) வரையிலான நாட்களில்
(31:12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01012023
(ஞாயிற்றுக்
கிழமை)
நீங்கலாக)
காலை
10.00 மணி
முதல்
மாலை
5.00 மணிக்குள்
தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
தத்கல் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
மேற்காண்
தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 05.012023 (வியாழக் கிழமை) முதல் 07.012023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை
10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள்அரசுத்
தேர்வுத் துறை சேவை மையத்திற்கு
நேரில் சென்று ஆன்-லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கால அட்டவணை
மார்ச்
/ ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்
நாட்கள் குறித்த தேர்வுக் கால
அட்டவணையினை www.dge1tngovin
என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
பழைய பாடத்திட்டதில் (Old Syllabus) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்
ஏற்கனவே
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) பொதுத்தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் (Old Syllabus) பழைய நடைமுறையில் (Old Pattern - 200 marks) / புதிய நடைமுறையில் (New Pattern-100 marks) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை புதிய
பாடத்திட்டத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
பழைய நடைமுறையில் (Old Pattern) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்
மேல்நிலை
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை
பழைய நடைமுறையின்படி (ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்கள்
வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) எழுதி தேர்ச்சி பெறாதோர்,
தேர்ச்சி பெறாத / வருகை புரியாத
பாடங்களில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வர்களுக்கு புதிய நடைமுறையின்படி (ஒவ்வொரு
பாடத்திற்கும் 70/90 மதிப்பெண்கள் வீதம்) மட்டுமே தேர்வு
நடத்தப்படும். பாடத்திட்டத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும்.
பழைய பாடத்திட்டத்திற்கு இணையாக புதிய பாடத்திட்டத்தில்
உள்ள பாடங்கள் புதிய பழைய பாடத்திட்டத்தில்
கலைப்பிரிவில் உள்ள கணினி அறிவியல்,
வணிகக் கணிதம், இந்தியப் பண்பாடு
மற்றும் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள பாடங்கள் ஆகியவை
புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்பாடங்களின்
விவரங்களடங்கிய பட்டியலை www.dge1tngov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள்
அறிந்து கொள்ளலாம். அப்பட்டியலில் உள்ள பாடங்களில் பழைய
பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத
தேர்வர்கள், அப்பாடங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள புதிய
பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் மட்டுமே
தேர்வு எழுத வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மற்றும் தேர்வுக் கட்டணங்கள்
1. HSE SECOND YEAR ARREAR:
தனித்தேர்வர்வகை:
ஏற்கனவே மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சிப் பெறாத பாடங்களில் தேர்வெழுதும் தனித்தேர்வர்கள்
விண்ணப்பிக்கத் தகுதியுள்ளோர்:
மேல்நிலை
இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை
ஏற்கனவே பழைய நடைமுறையில் / புதிய
நடைமுறையில் எழுதி தேர்ச்சி பெறாத
தனித்தேர்வர்கள் அப்பாடங்களை மட்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு.
பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு, 2 எழுத்துத் தேர்வு அனைத்திற்கும் வருகை தராதவர்கள், தாம்
பயின்ற பள்ளித்தலைமை ஆசிரியரிடமிருந்து மேல்நிலைக் கல்வியின்போது போதிய வருகை நாட்கள்
பெற்றிருந்தார் என்பதற்கான
சான்றிதழைப் பெற்று இணைக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம், இதர கட்டணங்கள் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம்: தேர்வுக்
கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- இதரக் கட்டணம் ரூ.35/- மற்றும்
ஆன்- லைன் பதிவுக் கட்டணம்
ரூ.50/-
(உ-ம்) ஒரு பாடம்
ரூ.50 + 35 50 = 135/-
இரு
பாடங்கள் =185
ரூ.100.35+50=185
தத்கல்
கட்டணம் = கூடுதலாக
ரூ.1000/-
2. HSE YEAR SECOND:
தனித்தேர்வர்வகை:
மேல்நிலை இரண்டாமாண்டு
தேர்வினை முதன் முறையாக
எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள்
விண்ணப்பிக்கத் தகுதியுள்ளோர்: ஏற்கனவே மேல்நிலை முதலாமாண்டு
தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற / பெறாத / +1 பொதுத்
தேர்விற்கு விண்ணப்பித்து வருகைபுரியாத தனித்தேர்வர்கள்
அனைவரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம், இதர கட்டணங்கள் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம்:
தேர்வுக்
கட்டணம் ரூ.150/-
இதரக்
கட்டணம் ரூ.35/-
ஆன்
லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-
மொத்தக்
கட்டணம் 5235/-
தக்கல்
கட்டணம்= கூடுதலாக ரூ.1000/-
+1 பொதுத் தேர்வெழுதிய பின் 2 பள்ளியில் பயிலாமல் இடைநின்ற மாணவர்கள்
செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களை பயின்ற பள்ளி மாணவர்கள்
முந்தைய
கல்வியாண்டுகளில் கீழ்க்காண் 5 பாடத்தொகுப்புகளில் (செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களைக்
கொண்ட பாடத் தொகுப்பு) ஏதேனும்
ஒரு பாடத்தொகுப்பில் பள்ளியில் பயின்று, பள்ளி மாணவராக +1 தேர்வெழுதி
தேர்ச்சிப் பெற்ற / தேர்ச்சிப் பெறாத
தேர்வர்கள், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பில்
பயிலாமல் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ்
பெற்று இடைநின்றவர்களாக இருப்பின், அவர்கள் மார்ச் / ஏப்ரல்
2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை
எழுதுவதற்கு +1 அசல் மாற்றுச் சான்றிதழ்,
இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட
41 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் உரிய
தேர்வுக் கட்டணத்துடன் சேவை மையத்தின் வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வு கொண்ட பாடங்களை பயின்ற பள்ளி மாணவர்கள்
மேல்நிலைக்
கல்வி என்பது மேல்நிலை முதலாம்
ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டை
உள்ளடக்கிய ஈராண்டு படிப்பு என்பதால்,
ஒரு பாடத் தொகுப்பில் 1பயின்று,
+1 தேர்வினை எழுதிவிட்டு, வேறொரு பாடத் தொகுப்பில்
2 தேர்வினை எழுத இயலாது.
செய்முறைத்
தேர்வு உள்ள ஒரு பாடத்தொகுப்பில்
1 பயின்று பள்ளி மாணவராக மேல்நிலை
முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய
பின்னர், பல்வேறு காரணங்களால், பள்ளிப்
படிப்பினை தொடர முடியாத நிலையில்
உள்ளவர்கள், அதே பாடத் தொகுப்பிலோ
அல்லது வேறு பாடத் தொகுப்பிலோ
2 பொதுத் தேர்வை நேரடி தனித்
தேர்வராக எழுத முடியாது. அவ்வகையான
தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்தொகுப்பில்
ஒன்றினை தேர்வு செய்து மீண்டும்
மேல்நிலை முதலாம் ஆண்டு (1) பொதுத்
தேர்வினை எழுதிய பின்னர் மேல்நிலை
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு
விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Govt Examination service Centres)
தனித்தேர்வர்கள்
தங்களது விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு
செய்திட மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள
அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Govt Examination service Centres) உரிய ஆவணங்களுடன் நேரில்
சென்று தங்களுடைய விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
மாவட்ட
வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை
www.dge1tngovinஎன்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்
மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி
இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம்:
ஆன்-லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு
செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு
(Registration Slip) வழங்கப்படும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application number)பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை
பின்னர்
அறிவிக்கும் நாளில் தேர்வுக் கூட
அனுமதிச்சீட்டுகளை
(Admission Certificate) பதிவிறக்கம்
செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச்
சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்aள வேண்டும்.
இது மிகவும் அவசியம்.
I. தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் (Govt.Examination Service Centre) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள
இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களே ஆன் - லைன் பதிவுக்கு
ஏற்றுக் கொள்ளப்படும்.
II. தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
தேர்வுக்
கட்டணம் மற்றும் ஆன்-லைன்
பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும்.
பார்வையற்றோர் / வாய்பேசாத மற்றும் காதுகேளாதோர் மேற்குறிப்பிட்ட
கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
III. மாற்றுத் திறனாளிகளுக்குச் சலுகைகள்
மாற்றுத்
திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட
தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர்,
தேர்வெழுத கூடுதல் நேரம் கோருதல்
போன்ற அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெற விரும்பினால், தங்களது
விண்ணப்பத்துடன் தனியே சலுகை கோரும்
கடிதத்தையும், உரிய மருத்துவச் சான்றிதழ்
நகல்களையும் கட்டாயமாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும்,
விண்ணப்பத்தினை ஆன்-லைன் மூலம்
பதிவேற்றம் செய்யும்பொழுது, தேர்வெழுத கோரும் சலுகைகளையும் பதிவேற்றம்
செய்யுமாறு சேவை மையங்களில் தெரிவித்தல்
வேண்டும்.
மாற்றுத்
திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் குறித்த அரசாணைகள் www.dge1tngovin என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
IV. செய்முறைத் தேர்வில் பங்கேற்கவுள்ள தேர்வர்களுக்கான முக்கிய குறிப்பு
செய்முறைத்
தேர்வில் பங்கேற்க வேண்டிய தேர்வர்கள், அரசுத்
தேர்வுகள் துறை அறிவிக்கும் நாட்களில்
தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை
பதிவிறக்கம் செய்த பின்பு, அதில்
குறிப்பிட்டுள்ள கருத்தியல் தேர்வெழுதவுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக்
கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு, செய்முறைத்
தேர்வில் பங்கேற்க வேண்டிய நாள் மற்றும்
இடம் பற்றிய விவரங்களை அறிந்து
கொள்ள வேண்டும்.
V. செய்முறை கலந்த பாடங்களில் தேர்ச்சி பெற தனித்தனியே குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் குறித்த விளக்கம்
பழைய நடைமுறை-1200 மதிப்பெண்கள்
செய்முறை
கலந்த பாடங்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல், மீண்டும் தேர்வெழுதுவோரைப் பொறுத்தவரை, தேர்ச்சி பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் 150-க்கு 30 மதிப்பெண்களும், செய்முறைத்
தேர்வில் 50-க்கு 40 மதிப்பெண்களும் பெற
வேண்டும்.
எழுத்துத்
தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வு செய்யவேண்டியதில்லை. எழுத்துத்
தேர்வினை மட்டும் எழுதினால் போதுமானது.
அதே போன்று, எழுத்துத் தேர்வில்
தேர்ச்சிப் பெற்று செய்முறைத் தேர்வில்
40 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள்,
எழுத்து தேர்வினை மீண்டும் எழுத வேண்டியதில்லை. செய்முறைத்
தேர்வு மட்டும் பங்கேற்றால் போதுமானது.
மேலும்,
மார்ச் 2001 மேல்நிலைத் தேர்விற்கு முன்னதாக தேர்வெழுதியவர்கள் தாங்கள் செய்முறைத் தேர்வில்
பெற்ற மதிப்பெண் விவரம் குறித்த சான்றினை
தாங்கள் படித்த மேல்நிலைப் பள்ளித்
தலைமை ஆசிரியரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க
வேண்டும். இச்சான்றினை படித்த பள்ளியில் பெறமுடியாமற்போனால்,
கண்டிப்பாக மறுபடியும் செய்முறை தேர்விற்கு வருகைபுரிய வேண்டும்.
புதிய நடைமுறை-600 மதிப்பெண்கள்
மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்
(புதிய நடைமுறை -600 மதிப்பெண்கள்)
தேர்ச்சிக்கான மதிப்பெண் விவரம்
• அரசாணை
எண் (2டி) 50, பள்ளிக்கல்வித் (ஜிஇ1)துறை, நாள்.09.08.2017-ன்படி
செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சிப் பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற்று செய்முறைத் தேர்வில்
கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும். மேலும், எழுத்துத்தேர்வு, அகமதிப்பீடு
மற்றும் செய்முறை தேர்வு ஆகியவற்றில் ஒட்டு
மொத்தமாக 100-க்கு குறைந்த பட்சம்
35 மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். செய்முறைத்தேர்வில் பங்கேற்காமல், தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண்(35)
பெற்றிருந்தாலும், அத்தேர்வர்கள் தேர்ச்சி பெறாதவர்களே ஆவர்.
• ஏற்கனவே
எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு மற்றும்
அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து
35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்
பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில்
மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள் மீண்டும்
எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம்.
• ஏற்கனவே
செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு மற்றும்
அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து
35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று பெறாதவர்கள்
தற்போது எழுத்து தேர்வு மற்றும்
செய்முறைத் தேர்வு தேர்ச்சி ஆகிய
இரண்டையும் கட்டாயம்
எழுதவேண்டும்.
VI. ஏற்கனவே பழைய நடைமுறையின்படி (Old Pattern) மேல்நிலை இரண்டாம் ஆண்டு(2) தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் புதிய நடைமுறையில் (New Pattern) தேர்வெழுதினால் மதிப்பெண் வழங்கும்முறை
மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம்
அரசாணை
(நிலை) எண்.118, பள்ளிக் கல்வி (அதே)துறை, நாள்.09.06.2018-ன்படி,
மார்ச் 2019 முதல் நடத்தப்படும் மேல்நிலை
முதலாமாண்டு (1) மற்றும் இரண்டாமாண்டு (2) பொதுத்
தேர்வுகளில், ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி
மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் (English) பாடங்களில்
உள்ள இரண்டு தாள்களை, இரண்டு
தேர்வுகளாக நடத்துவதற்கு பதிலாக தாள் 1 மற்றும்
II ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே தாளாக தேர்வுகள்
நடத்தப்படும். பழைய பாடத்திட்டத்தில் மார்ச்
2018-ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி மொழிப்பாடம்
/ ஆங்கிலப்பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இது
பொருந்தும்.
பழைய
நடைமுறையின்படி (Old
Pattern) மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கான மொழிப்பாடம் / ஆங்கிலப்பாட முதல் தாளினையும், 80 மதிப்பெண்களுக்கான
மொழிப்பாடம் / ஆங்கிலப்பாட இரண்டாம் தாளினையும், எழுதி தோல்வியடைந்த தேர்வர்கள்,
90 மதிப்பெண்களுக்கு ஒரே தாளாக நடத்தப்படும்
மொழிப்பாடம் / ஆங்கிலப்பாடத்தேர்வினை எழுதுதல் வேண்டும். அப்பாடத்தேர்வுகளில் அத்தேர்வர்கள் 90 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்களை 2 - ஆல்
பெருக்கி 180 மதிப்பெண்களுக்கான மதிப்பெண்களாக மாற்றம் செய்து, கற்றல்
/ கேட்டலுக்கான 20 மதிப்பெண்களையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாற்றம் செய்து தேர்வு
முடிவு வெளியிடப்படும்.
செய்முறைத் தேர்வு இல்லாத (Non Practical)பாடங்கள்
பழைய
நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி, செய்முறைத்
தேர்வு இல்லாத பாடங்களில் தேர்ச்சி
பெறாத/ வருகை புரியாத தனித்தேர்வர்களுக்கு
புதிய நடைமுறையில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். 90 மதிப்பெண்களுக்கு
தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் X எனில்,
அம்மதிப்பெண்ணை 90 ஆல் வகுத்து, 200 ஆல்
பெருக்கி [ (x/90) x 200 ]
200க்கு மாற்றம் செய்து தேர்வு
முடிவு வெளியிடப்படும்.
செய்முறைத் தேர்வு உள்ள (Practical)பாடங்கள்
பழைய
நடைமுறையில் (200 மதிப்பெண்கள்) மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி, செய்முறைத்
தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத
தனித்தேர்வர்களுக்கு புதிய நடைமுறையில் 70 மதிப்பெண்களுக்கு
தேர்வு நடத்தப்படும். 70 மதிப்பெண்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண்கள்
150க்கு மாற்றம் செய்து தேர்வு
முடிவு வெளியிடப்படும். (செய்முறைத் தேர்வு 50 மதிப்பெண்கள்) எழுத்துத்தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் x எனில்,
அம்மதிப்பெண்ணை 70 ஆல் வகுத்து, 150 ஆல்
பெருக்கி [ (x/70) × 150 ]
பெறப்படும் மதிப்பெண்ணுடன் செய்முறைத்தேர்வின் மதிப்பெண்ணையும் சேர்த்து 200க்கு மாற்றம் செய்து
தேர்வு முடிவு வெளியிடப்படும்.
VII. கேட்டல்-பேசுதல் திறன் தேர்வு
பகுதி 1 மற்றும் பகுதி II மொழிப்பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு
பழைய
நடைமுறையில் (200 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்கள் ஏற்கனவே மொழிப்பாடம் /
ஆங்கிலப்
பாடம் / சிறப்பு மொழி (தமிழ்)
பாடத்தேர்விற்கான கேட்டல் / பேசுதல் திறன் தேர்வில்
பங்கேற்கவில்லையெனில் அத்தேர்வர்களுக்கு மட்டும் தற்போது கேட்டல்
/ பேசுதல் திறன் தேர்வு நடத்தப்படும்.
தேர்வர்கள் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுக்கு
தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரால்
தெரிவிக்கப்படும் குறிப்பிட்ட தேதியில் வருகை புரிய வேண்டும்.
தவறினால் கேட்டல் / பேசுதல் தேர்வுக்கான 20 மதிப்பெண்களை
இழக்க நேரிடும். கருத்தியல் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மட்டுமே பதியப்பட்டு மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படும்.
ஏற்கனவே
கேட்டல் / பேசுதல் திறன் தேர்வில்
பங்கேற்றவர்களுக்கு மீண்டும் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு
நடத்தப்படாது. அத்தேர்வர்கள் ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள்
அடுத்து வரும் மொழிப்பாட தேர்வுகளுக்கும்
எடுத்துக் கொள்ளப்படும். எந்தச் சூழ்நிலையிலும் இத்தேர்வை
மீண்டும் செய்வதற்கு வழிவகை இல்லை.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் :-
ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு
செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்
சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப
எண்ணை (Application
Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை
பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டுகளை (Hall Tickets) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால்,
ஒப்புகைச் சீட்டினை தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வர்
தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
VIII. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் முறை
அரசாணை
(நிலை) எண் 195, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை,
நாள்.14.09.2018 ன்படி,
i. மேல்நிலை
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம்
ஆண்டு பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு
முடிவுகள் வெளியிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் சமயம், மேல்நிலை முதலாம்
ஆண்டு பொதுத் தேர்விற்கு 600 மதிப்பெண்கள்
மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு
600 மதிப்பெண்கள் என பதிவு செய்து
தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark
Certificates) வழங்கப்படும்.
ii. மேல்நிலை முதலாம்
ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ
அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ
முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிழ்கள் வழங்கும் சமயம், முதலாம் ஆண்டு
மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில்
பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து ஒருங்கிணைந்த
மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) மட்டும் வழங்கப்படும். அவ்வகையான
தேர்வர்களுக்கு அவ்விரு தேர்வுகளிலும் முழுமையாக
தேர்ச்சி பெறும் வரை தேர்வர்கள்
பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து
ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) மட்டுமே வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள்
அரசாணை
(நிலை) எண். 34, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாடு (எஸ் 1) துறை, நாள்.30.03.2022-ன் படி, பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற
மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு (1) மற்றும்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (-2) -க்கான தமிழ் மற்றும்
ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத்
தேர்வு சேவை மையங்களின் வாயிலாக
மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு:
தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும்வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும்,
தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து
ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஒம்/-
அரசுத் தேர்வுகள்
இயக்குநர்
இடம்: சென்னை-6
நாள்:
19.12.2022.
Comments
Post a Comment